"அன்னை தெரசா விருது"
வழங்கப்பட்ட தேதி : 17.12.2021
"அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளை, அவிநாசி"
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
பட்டாம்பூச்சிக் குழு அமைப்பைச் சேர்ந்த நாங்கள் வெவ்வேறு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். நண்பர்கள் ஆன நாங்கள் சுமார் பத்து பேர் ஒன்றிணைந்து குழந்தைகளிடையே
இடைநிற்றல் விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் சேவை மனதுடன் அரசு பள்ளி கட்டிடங்களுக்கு ஓவியம் வரைவதற்காக எங்களின் வார இறுதி விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கிறோம்.
எங்களின் இந்த சிறு முயற்சி பள்ளியின் தோற்றத்தை மேம்படுத்துவதோடு மட்டும் அன்றி , மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஊக்குவிப்பத்தோடு கல்வி கற்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.
எங்களின் வழக்கமான பொறுப்புகளைத் தாண்டி, நாளைய எதிர்கால தூண்களான மாணவர்களுக்கு, வளமான சூழலை உருவாக்குவதற்கான எங்களின் இந்த சிறு சேவை வருங்காலத்தில் பலரது கூட்டு முயற்ச்சியினால் பலர் பயனடைய இது ஒரு சிறு தொடக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்.
பள்ளியின் பராமரிப்பு மற்றும் மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் எங்களின் இந்த அர்ப்பணிப்பு; சமூகத்தில் நல்ல கல்வி கற்கும் சூழல் மேம்படுவதை கண்முன்னே காட்டுகிறது.
பட்டாம்பூச்சிக் குழு கீழ் கண்ட தலைப்புகளை அடிப்படையாய் கொண்டு ஓவியங்களை வரைந்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வைு ஏற்படுத்துகிறது.
கல்வி
__
சுகாதாரம்
__
மாசுக் கட்டுப்பாடு
__
கல்வி உரிமை
__
பிளாஸ்டிக் மறுசுழற்சி
__
மழைநீர்
சேகரிப்பு
__
நாட்டுப்புற நடனங்கள்
__
குழந்தை தொழிலாளி
__
பட்டாம்பூச்சிக்குழுவின் முதல் முன்னுரிமை மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளே ஆகும்; ஏனெனில் இந்த பள்ளிகளே தொலைதூர மற்றும் சவாலான பகுதிகளில் முக்கியமான கல்வி
மையங்களாக செயல்படுகின்றன, இவை இல்லையெனில் முறையான கல்வியை பல மாணவர்கள் இழக்க நேரிடும்.
அதன் பின்னர், பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பள்ளிகளில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.
தயவுசெய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் புகைப்படங்களை இந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு +91 7871188752 அனுப்பவும், பதிவுசெய்தவுடன், தேதி வாரியாக விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து, முறையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்முறையைத் தொடங்குவோம். தேவையான தகவல்களை வழங்குவதில் உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு பெரிதும் உதவும்.
விண்ணப்பித்த பிறகு, செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான குறிப்பிட்ட தேதிகள் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். இது இரு தரப்பினரும் தயாராகுவதற்கு போதுமான அளவு காலம் இருப்பதை உறுதி செய்கிறது.
ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும், ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் எங்களுடன் இணைந்து பணியாற்ற பட்டாம்பூச்சிக் குழு அன்புடன் வரவேற்கிறது.
வழங்கப்பட்ட தேதி : 17.12.2021
"அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளை, அவிநாசி"
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தேதி : 31.07.2022
"ஸ்ரீ மதுரா நகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம், அவிநாசி"
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தேதி : 06.12.2021
"இணைந்த கரங்கள் அறக்கட்டளை, திருப்பூர்"
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தேதி : 20.12.2023
"JCI திருப்பூர் சுபா, திருப்பூர்"
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தேதி : 21.09.2022
"ரோட்டரி கிளப் ஆஃப் திருப்பூர் பாரதி, திருப்பூர் "
தன்னலமற்ற சேவைக்கு பாராட்டி வழங்கப்பட்டது.
தொலைநோக்கு
பார்வை:
"ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்கமளிக்கும் சூழலில் தரமான கல்வி அமையப்பெற்ற உலகத்தை கட்டமைத்தல் "
திட்டம்:
"பள்ளிகளில் பல செயல்முறை மேம்பாடுகள் அடங்கிய உகந்த கற்றல் சூழலை உருவாக்குவதும், அவற்றை அழகுபடுத்துவதும், புதுப்பிப்பதுமே எங்கள் திட்டமாகும். எங்கள் முயற்சிகளின் மூலம், இந்த மேம்பட்ட பள்ளிகளை பின்தங்கிய குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கவும், அவர்களுக்கு புன்னகையையும் உத்வேகத்தையும் கொண்டு வரவும், அவர்களின் பள்ளி நாட்களை பிரகாசமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளோம்".